கலவான பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத காரணத்தினால் கடை உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து 27 லட்சத்திற்கும் அதிகமான சொத்தை கொள்ளையடித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தனது கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் ஒன்றைக் கடனாகக் கேட்டதாகவும், ஆனால் கடை உரிமையாளர் மறுத்துவிட்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
- Advertisement -
இதனால் அவரது வீட்டில் இருந்து பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கலவான நிககொட பிரதேசத்தை வசிப்பிடமாகவும், அந்த வீட்டிற்கு அருகில் வசிப்பவர் எனவும் கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பொருட்களில் சுமார் பத்து பவுன் பெறுமதியான தங்க நகைகளும் அடங்குவதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.