மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சுங்கக் கட்டணமின்றி 30,000 அமெரிக்க டொலர்களுக்கு மிகாமல் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பின்வரும் தகுதி நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்,
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கும் குறைவாக இயங்கியிருக்க வேண்டும்.
திட்டத்தின் விரிவாக்கத்திற்கான முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச முதலீடு US$ 3 மில்லியன் ஆகும்.
முன்மொழியப்பட்ட நிறுவன விரிவாக்கத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 50 வேலைகளை உருவாக்குதல்.
ஒரு நிறுவனம் 50 புதிய உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அதில் 15 பணியாளர்கள் தொழில்நுட்பத் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
குறைந்தபட்ச முதலீடு 250,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.