லுனுகம்வெஹெர-குடா கம்மான 01, ஸ்பீல்யாய பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
குடா கம்மான 01 ஸ்பீல்யாய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். வெளியில் இருந்து வந்த சந்தேகநபர், ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- Advertisement -
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்