அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
இன்றைய தினம் (22-03-2023) ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 312.61 ஆகவும், விற்பனை விலை 330.16 ஆகவும் பதிவாகியுள்ளது.
- Advertisement -
நேற்றைய தினம் (21-03-2023) டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 316.84 ஆகவும், விற்பனை விலை 334.93 ஆக இருந்தது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளமை காரணமாக தங்கத்தின் விலை சுமார் 10,000 ரூபாயினால் குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கத்தின் விலை 165,000 ரூபாயாகவும் 22 கரட் 152,000 ரூபாயாகவும் ஆகவும் பதிவாகியுள்ளது.