ஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்றைய தினம் (21-03-2023) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்த கல்வி அமைச்சர், பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.
- Advertisement -
கடந்த 3 ஆண்டுகளில் 8,893 ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.