நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (01.03.2023) பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
- Advertisement -
இதேவேளை அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
- Advertisement -
இதன்படி, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை கருப்பு நிற ஆடைகளை அணிந்து, கருப்பு பட்டிகளை அணிந்து பாடசாலைகளுக்கு பிரசன்னமாகுமாறு, ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்