கொழும்பு – 7 பகுதியிலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குதிரை பந்தய திடலிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
- Advertisement -
ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்