கனடாவில் 2023ஆம் ஆண்டில் ட்ரெண்டிங் ஆக உள்ள பணிகள் எவை, அவற்றிற்கு எவ்வளவு ஊதியம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
மனித வள மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனமான Randstad Canada, இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் பொருளாதாரம் சற்று மந்தமானாலும், இன்னமும் பல நிறுவனங்கள் பணியாளர்களைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன.
- Advertisement -
2023ஐ பொறுத்தவரை, தொழில்நுட்பம், மருத்துவத்துறை மற்றும் சேவைத்துறைகளில் உள்ள பணிகளுக்குத்தான் அதிக கேள்வி இருக்குமாம்.
இருந்தாலும், விநியோகம், திறன்மிகு வர்த்தகம், மின்னணு வர்த்தகம் முதலான துறைகளிலும் அதிக தேவை உள்ளதாம்.
ஊதியத்தைப் பொருத்தவரை, கனடாவில் 2023இல், developers, மனித வள மேலாளர்கள், எந்திரவியல் பொறியியலாளர்கள் மற்றும் கட்டுமானத்துறையில் திட்ட முகாமையாளர்கள் ஆகிய பணிகளுக்குத்தான் அதிக ஊதியமாம்.
2023இல் ட்ரெண்டிங் ஆக இருக்கும் முதல் 15 பணிகளும், அவைகளுக்கான ஊதிய விகிதமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Developer: $68,000 to $155,000 ; HR Manager: $75,000 to $156,000 ; Mechanical engineer: $66,000 to $131,000
Welder: $40,000 to $74,000 ; Accounting technician/bookkeeper: $61,000 to $114,000 ; Registered nurse: $68,000 to $94,000 ; Warehouse worker: $17 to $29 per hour
Customer service representative: $43,000 to $74,000 ; Driver: $42,000 to $65,000 ; Sales associate: $46,000 to $84,000 ; Administrative assistant: $47,000 to $99,000 ; Business analyst: $62,000 to $142,000 Production supervisor: $53,000 to $114,000 ; Digital marketing coordinator: $62,000 to $122,000 ; Construction project manager: $61,000 to $150,000