கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். அமித் ஜயசுந்தர முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சை முழுமையாக முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பரீட்சைகள் ஆணையகத்தின் உத்தரவினை மீறி செயற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் தலைமையகம், இலங்கைப் பரீட்சை திணைக்களத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யுமாறும் அமித் ஜயசுந்தர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.