HomeNewsLocal Newsஅரச ஊழியர்களுக்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கும் அதிர்ச்சி தகவல் - ஜனவரி மாத நிதியம் வழங்குவதில்...

அரச ஊழியர்களுக்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கும் அதிர்ச்சி தகவல் – ஜனவரி மாத நிதியம் வழங்குவதில் பாரிய சிக்கல்

திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்படி ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சமுர்த்தி கொடுப்பனவை வழங்குவதில் இரண்டு வாரங்கள் தாமதம் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இதற்கு தீர்வாக, அனைத்து அமைச்சுக்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் பணத்தில் 5% குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments