யாழ்.சாவகச்சோி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 72 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணைகளின் பின்பே பூரண தகவல்களை வெளிப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தொிவித்துள்ளனர்.