2021 உயர்தரப் பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
- Advertisement -
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று வெட்டுப்புள்ளிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
- Advertisement -
இந்த வருடத்தில் 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும்.