அடுத்த வருடம் முதலாம் தவணையில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 70 வீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 30 வீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.