பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு சிறிலங்கா கிரிக்கட் 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது.
சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்படி, இந்த தொகைக்கு மேலதிகமாக பல உதவிகளும் அவருக்கு வழங்கப்படும் என்று அறியமுடிகிறது.
- Advertisement -
கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஸ்க குணதிலக்க, வடமேல் சிட்னியில் தங்கி இருப்பார்.
அவரது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டுள்ளதுடன், இரவு வேளையில் நடமாடவும், டிண்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தனுஸ்க 150,000 டொலர்கள் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.