அநுராதபுரம், பாதெனிய – தலதாகம வீதியில் ரிதிபதியெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -

அனுராதபுரத்தில் இருந்து பாதெனிய நோக்கி பயணித்த கார் ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -
விபத்தில் சிக்கிய மூவரும் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையிலே சிறுவனும் ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரம் – பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று (17.10.2022) இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த கார் ஒன்று மரத்தில் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ் விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.