HomeNewsLocal Newsகொத்து பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!!

கொத்து பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!!

கோதுமை மாவின் விலை 250ரூபாவால் குறைந்தால் கொத்து விலையையும் குறைக்க தயார் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ஊடவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த நாட்டின் அப்பாவி மக்கள், தோட்டத் தொழிலாளிகள், ஒரு ரொட்டியை சாப்பிட்டு, இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றனர்.

இன்று அந்த மக்கள் சாப்பிடுவதற்கு வழியில்லை. மிகப்பெரிய மாஃபியா உள்ளது. நேற்று கதிர்காமத்தில் ஒரு கிலோ கோதுமை மா 490 ரூபாய்.

எனவே, மாவின் விலை 250 ரூபாய் வரை குறைந்தால், கொத்து விலை, மரக்கறி ரொட்டி விலை, ரோல்ஸின் விலையை குறைக்க தயாராக உள்ளோம்.

இது ஊடக நிகழ்ச்சி அல்ல. இந்நாட்டு மக்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்குமா? அந்த நிவாரணம் சேவைகள் மூலம் வழங்கப்பட வேண்டும்.

அப்படித்தான் நடக்க வேண்டும். அதிகரிக்கும் போது அதிகரிக்கவும், குறையும் போது குறைக்காமல் இருக்கவும் முடியாது. அது நெறிமுறை அல்ல.” என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்று பொதி ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக கடந்த 4ஆம் திகதி அசேல சம்பத் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments