அகலவத்தை பகுதியில் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
- Advertisement -
அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபர், குடும்ப தகராறு காரணமாக அமிலத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண், சட்டத்தரணி என தகவல் வெளியாகியுள்ளது.
38 வயதுடைய பெண், அவரது 64 வயதுடைய சிறிய தந்தை மற்றும் 36 வயது சகோதர் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் , தனது கணவர் தனக்குத்தானே அமிலத்தை ஊற்றிக் கொண்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணியான பெண் தெரிவித்துள்ளார்.
அமிலத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.