வவுணதிவில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் வவுணதீவு பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து வந்த பிரதேச சபை தவிசாளரின் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
- Advertisement -
வவுணதீவில் இருந்து அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை ( Break ) இளந்து தவிசாளரின் டிப்பர் வாகனத்துடன் மோதி உள்ளது.
- Advertisement -
மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்த இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். இவ் இருவரும் அவசர சேவை ( 1990 ) அம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள நாவற்காடு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வவுணதிவுப் பொலிசார் மோற்கொண்டு வருகின்றனர்.