நாட்டில் தனி நபர் ஒருவரின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 12 ஆயிரத்து 444 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
கடந்த ஜூன் மாதத்திற்கான அறிக்கை படி தனி நபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதச் செலவாக குறித்த தொகை மதிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
இதனிடையே, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் தனி நபர் ஒருவருக்கு மாதாந்தம் அதிகபட்சமாக 13 ஆயிரத்து 421 ரூபா தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தொகையானது இலங்கையிலுள்ள மாவட்டமொன்றில் வாழும் தனி நபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செலவிடப்படும் அதிகூடிய தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், தனி நபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செலவு செய்யப்படும் தொகையானது கடந்த ஜூன் மாதம் ஆயிரத்து 225 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில், கடந்த ஜூலை மாதத்தின் நாட்டின் பண விக்கமானது 0 தசம் 85 வீதமாகவும் உணவுப் பணவீக்கம் 90 தசம் 9 வீதமாகவும் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.