விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எப்படியிருப்பினும் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அதற்கமைய, நேற்று இரவு இந்த திருத்தம் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.