தங்க விலையானது எதிர்வரும் ஆறு மாதங்களில் குறையும் என உலக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
- Advertisement -
இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. உலகின் இரண்டாவது தங்க நுகர்வோர் நாடாக இருக்கும் இந்தியாவில் தங்கத்திற்கான விலை குறைந்தால் தங்க விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
ஏற்கனவே சந்தைக்கு வந்த பழைய தங்க நகைகள் மறுசுழற்சிக்கு வந்தமையினால் விலை கட்டுப்படுத்தப்படும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் தங்க விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, கடந்த நாட்களில் 22 கரட் தங்கத்தின் விலை 166,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலையும் 180,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.