விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு படையினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதேசத்தை கைப்பற்றி பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டகாரர்கள், இராணுவத்தினரை பார்த்து இதனை கூறியுள்ளனர்.
- Advertisement -
இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்படும் போர் குற்றச்சாட்டுக்கு இன்னும் பதில் இல்லை எனவும் காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் ஊடாக இராணுவத்தின் போர் குற்றம் உறுதியாகி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சரத் பொன்சேகா கட்டளை வழங்கிய இராணுவத்தினரே சரியாக பணியாற்றினர். நீங்கள்(படையினர்) தாக்குதல் நடத்துவதை முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது.
நீங்கள் செய்த போர் குற்றங்களுக்கு இதுவரை பதில் இல்லை. நீங்கள் செய்யும் வேலைகளால் அந்த குற்றச்சாட்டுக்கள் உறுதியாகும்.
நீங்கள் இராணு உடையில் சென்றால் காரி துப்புவார்கள். உங்களை விட புலிகள் சிறந்தவர்கள். பிரபாகரனுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
நீங்கள் இப்படி செயற்பட்டதன் காரணமாகவே புலிகள் எங்களையும் தாக்கினர், கோபம் கொண்டனர் எனவும் காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் ஒருவர் இராணுவத்தினரை பார்த்து கூறியுள்ளார்.