முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஒரு முன்னோடி திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகம் (Mobile Fuel Dispensers) பயன்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன், முச்சக்கர வண்டிகள், டெலிவரி மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கான்களுக்கு எரிபொருள் நிலையங்களுக்கு அப்பால் திறந்தவெளிகளில் இந்த எரிபொருள் ட்ரக் பயன்படுத்தப்படும் எனவும், இது விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அமைச்சர் காஞ்சன விஜயசேகர ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.