தங்களின் ஆட்சிக்காலத்தில் தவறு இடம்பெற்றுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கை வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

தவறான தீர்மானங்கள், காலத்துக்கு காலம் சரியான தீர்மானங்களை எடுக்காமை மற்றும் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
எங்கள் கட்டமைப்பை விரைவாக உருவாக்கினோம். மேலும் நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் நல்லாட்சியை நடைமுறைப்படுத்த சென்றோம். அங்குதான் எமது அரசாங்கம் தவறிழைத்துள்ளது. எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்து கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.