பொலிஸ் மா அதிபரினால் மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் அத்தகைய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்படுவதற்கான ஏற்பாடு இல்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எந்த அதிகாரத்தின் கீழ் அவர் அத்தகைய ஊரடங்குச் சட்டத்தை அறிவித்துள்ளார் கேட்க விரும்புவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் என்பது கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை நசுக்கும் நோக்கம் கொண்டது எனவும் அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஜனநாயகமற்றது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறத் தவறினால் நாட்டிற்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.