இலங்கையில் இன்றைய தினம் (17-05-2022) முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை நடவடிக்கைகளும் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
நாட்டில் அண்மையில் நிலவிய அமைதியின்மை காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் பாடசாலைகள் இயங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் பல தடவைகள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதனால் பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று தொடர முடியாமல் போனதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலித எகொடவில தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் பாடசாலை நடவடிக்கைகளை வழமை போன்று பராமரித்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.