பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று மாலை பதவி விலகிய பின்னர், அப்பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயரை பரிந்துரைக்க ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இதன்போது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது.

அதேசமயம் , கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களில் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், மேலும் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.