எதிர்காலத்தில் இலங்கையின் கடன் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஒரு துளி எரிபொருளை கூட இலங்கைக்கு கொண்டு வரப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- Advertisement -
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதே தவிர, அரசியல் நெருக்கடியல்ல எனவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு அனைவரும் தேசிய ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதேவேளை, தற்போது நாட்டில் எஞ்சியிருக்கும் டொலர்களை எரிபொருள் தாங்கி போன்று பதிவிறக்கம் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்