நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா ( Wasantha Perera) தெரிவித்துள்ளார்.
- Advertisement -
சுழற்சி முறையில் இன்றைய தினமும் சுமார் 5 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே 5 மணித்தியால மின்விநியோக துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில் 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
அதேபோன்று கொழும்பு 01 தொடக்கம் கொழும்பு 15 வரையான பிரதேசங்களிலும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.