நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக, பல்வேறு துறைகளின் போக்குவரத்து பணிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி பயணிகள் பேருந்து சேவை மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான சேவைகள் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
இவ்வாறான சூழ்நிலையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாளை முதல் பேருந்து சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.