200 வருடங்கள் பழமையான ஆல மரக்கிளையொன்று விழுந்து உயிரிழந்த ஆசிரியரின் உடல் பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 200 வருடங்கள் பழமையான ஆல மரக்கிளையொன்று விழுந்து உயிரிழந்திருந்தார்.
- Advertisement -
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் வே.மகேஸ்வரன் என்ற 39 வயதான ஆசிரியர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்திற்கு நீதி கோரி பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டம் ஒன்றையும் சம்பவதினத்தன்று முன்னெடுத்திருந்தனர். எனினும் பொலிஸார் வழங்கிய உறுதிமொழிக்கமைய மேற்படி போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது.
தலவாக்கலை பிள்ளையார் ஆலய பகுதியில் அமைந்துள்ள மரத்தை அகற்றும் சந்தர்ப்பத்தில், வீதி தடைகள் எதுவும் தகுந்த முறையில் இடவில்லை எனவும்,இந்த மரத்தை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது எனவும் கோரி, பிரதேசவாசிகள் தொடர்ந்தும் முரண்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.