இளைஞர் ஒருவர் 264 லொட்டரி சீட்டுகள் வாங்கிய நிலையில் அனைத்திற்கும் பரிசு விழுந்துள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.விர்ஜினியாவை சேர்ந்த ஜலீன் டைலர் என்ற இளைஞர் கடந்த இரண்டு மாத இடைவெளியில் மொத்தமாக 264 லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.
- Advertisement -
அவர் வாங்கிய ஒரு டிக்கெட்டின் விலை $1 ஆகும். அதன்படி அனைத்து டிக்கெட்களுக்கு சேர்ந்து மொத்தமாக $132,000 (இலங்கை மதிப்பில் 2,67,98,706.00) பரிசு விழுந்துள்ளது.
- Advertisement -
முதலில் 104 டிக்கெட்களை வாங்கிய அவர் பிறகு 160 டிக்கெட்களை வாங்கியிருக்கிறார். அனைத்து டிக்கெட்களையும் டைலர் பல்பொருள் அங்காடியில் வாங்கியிருக்கிறார்.
இப்படி வாங்கிய அனைத்து டிக்கெட்களுக்கும் பரிசு விழுந்துள்ளதால் டைலர் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.