மட்டக்களப்பு மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. தீப் பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள் இருந்த அனைத்து பொருட்களும் கருகி நாசமாகியுள்ளது.