தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட, அவுஸ்திரேலியா – சிட்னியைச் சேர்ந்த A.R.பிரிதீஷ் என்ற 12 வயதுச் சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- Advertisement -
Drums வாத்தியத்தில் ஒரு நிமிடத்தில் 2370 drumbeats-ஐ வாசித்ததன் மூலம் இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டிருக்கின்றது.
- Advertisement -
இதற்கு முன்னர் ஒரு நிமிடத்தில் 2109 drumbeats பதிவு செய்யப்பட்டமையே சாதனையாக காணப்பட்ட நிலையில் அதனை பிரிதீஷ் முறியடித்துள்ளார்.
குறித்த சிறுவன் கடந்த 2020 ஆண்டில் drums வாத்தியம் தொடர்பிலான Trinity College of London தரம் 8 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
அதன்பின்னர், 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்படி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.