2021 மற்றும் 2022 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, மதுபானம், சிகரெட், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல், பந்தயம், சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீது பல்வேறு விதத்தில் அறவிடப்பட்ட வரிக்கு பதிலாக, விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை அறவிடுவது குறித்து யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி, இந்த வரி அறவீட்டு முறை தொடர்பிலான சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரியை அறவிடும் முறையை மேம்படுத்தும் வகையிலான வழியை அமைப்பது இந்த புதிய சட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.
- Advertisement -
இந்த புதிய சட்டமூலம் ஜனவரி மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.