கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் இவ்வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றோர் தொகை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இவ்வருடம் 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு சென்றுள்ளனர்.
- Advertisement -
இவர்கள் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
கட்டாருக்கு 30,000 பேரும், சவுதி அரேபியாவுக்கு 27,000 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 20,000 பேரும், தென் கொரியாவுக்கு 1,400 பேரும், சிங்கப்பூருக்கு 1,100 பேரும், சைப்ரஸிற்கு 1,600 பேரும், ஜப்பானிற்கு 800 பேரும் சென்றுள்ளனர்.