கொழும்பு கொச்சிக்கடை, பொருத்தோட்டையில் போலியான பிசிஆர் பரிசோதனை அறிக்கைகளை விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். \
- Advertisement -
இந்த சுற்றிவளைப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பின் போது 17 போலியான பிசிஆர் அறிக்கைகள் மற்றும் அச்சிடும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
- Advertisement -
சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வோருக்கு போலியான பிசிஆர் அறிக்கைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.