மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்தச் செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
- Advertisement -
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,நாட்டில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. ஆனால், நாம் எதிர்ப்பார்த்தளவு அதனைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
- Advertisement -
இந்நிலையில் தற்போது வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு நாம் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததே காரணம் எனவும் அவர் கூறினார்.