இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு சேர்த்துள்ளதாக கூறப்படுகின்றது. கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
- Advertisement -
இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.