நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டமாயின் குறைந்தபட்சம் டீசல் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். இதேவேளை, டீசல் விலை அதிகரித்தால் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
- Advertisement -
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் எரிபொருள் தொடர்பான எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில்லா (Udaya Gammanpila) எவ்வித தீர்மானத்தை எடுப்பார் என்பது தொடர்பில் எனக்கு எதுவும்தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.