சினோஃபார்ம் கோவிட் தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசி, பூஸ்டராக அதாவது மூன்றாம் தடுப்பூசியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவு கிடைத்த 6 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் அளவு வழங்கப்படும்.
- Advertisement -
பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பூசி போடுவதைத் தாமதப்படுத்தினால் ஃபைசர் பூஸ்டர் அளவைப் பெறுவது தாமதமாகும். எனவே மாணவர்கள் அருகிலுள்ள பல்கலைக்கழகத்தின் மூலம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.