யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பெலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் தந்தையும், மகளும் காயமடைந்துள்ளனர்.
கெற்பெலியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த மதுபோதை நபர் வாள்வெட்டை நடத்தியுள்ளார்.
- Advertisement -
52 வயதான தந்தையும், 18 வயதான மகளும் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தந்தை மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.