மதுபோதையில் மாமியாரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மருமகனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என தெரியவருகிறது.
ஒரே வீட்டில் மாமி மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் வசித்து வந்துள்ளனர்.நேற்றிரவு மதுபோதையில் வந்து மனைவியை தாக்கிய போது மாமியார் குறுக்கே வந்து மருமகனை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் கோபம் கொண்ட மருமகன் தனது மாமியாரை தடியாள் சராமரியாக தாக்கியதாகவும், இதனையடுத்து மாமியார் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மருமகன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.