முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்தகவலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
அத்துடன் இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் சந்தர்ப்பத்தில், வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.