தளபதி விஜய் அவர்கள் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் விரும்பப்படும் மாஸ் நடிகர். இவரது ஒவ்வொரு படமும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது கடைசியாக வெளியான மாஸ்டர் படமும் மாஸ் வெற்றிபெற்றது. தற்போது தளபதி விஜய் அவர்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவுபெற்ற நிலையில். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
- Advertisement -
இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் தனது அடுத்த படத்தை தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் தளபதி விஜய், காடுகள் மற்றும் இயற்கை வளங்கள் அழிந்து வரும் சூழலை எதிர்த்து பேசும் பத்திரிக்கையாளராக மாறிய வைல்ட் லைப் புகைப்பட கலைஞராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் அவர்கள் இதுவரை தனது திரைப்பயணத்தில் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை என்பதால் ரசிகர்களிடம் இந்த தகவல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.