நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
ஊரடங்கு நீடிக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பின் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.