கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுவதாக, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் அல்லது பிற ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களுக்கு பொதுமக்கள் ஏமாறாமல், கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கேட்டுக்கொள்கிறார். 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் தற்போது தடுப்பூசியை பெற தயக்கம் காட்டுவதாகவும், அதிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டால் பாலியல் ரீதியான நடவடிக்கைகள் பாதிப்படைந்து, இதன்மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகும் என்ற கருத்து சமூகத்தில் பரவுவதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு, சினோபார்ம் தடுப்பூசி குறிப்பிட்ட சில நாடுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.