சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இந்த வாரத்தின் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தினை கண்டாலும், வார இறுதியில் மீண்டும் தொடர்ந்து சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய தொடங்கியுள்ளன.
- Advertisement -
இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து அழுத்தத்தில் காணப்படுகிறது. இது தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 1754.50 டாலர்களாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று அதிகபட்சமாக 1788.40 டாலர்களை தொட்டது.
- Advertisement -
இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1737.50 டாலர்களையும் தொட்டது. வெள்ளிக்கிழமையன்று முடிவில் சற்றே ஏற்றம் கண்டு 1743.70 டாலர்களாக முடிவடைந்தது. இது ஒரு வாரத்தில் 11 டாலர்களுக்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.