எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இரவு நேரங்களில் 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
- Advertisement -
அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையும் அமுலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான சுகாதார விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அரச தரப்பை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.