இன, மத மற்றும் பேசும் மொழியின் அடிப்படையில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பைசர் தடுப்பூ ஏற்றப்படுவது குறித்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் அதற்கு பதிலளித்துள்ளார். அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,
- Advertisement -
தடுப்பூசி ஏற்றப்படும் மாவட்டம், தடுப்பூசிகளின் எண்ணிக்கை, எந்த வகை தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சே தீர்மானிக்கும். கடந்த காலங்களில் மன்னார், கண்டி போன்ற இடங்களில் இந்த குற்றம் சுமத்தப்படும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
- Advertisement -
கடந்த காலங்களில் இந்த தடுப்பூசி ஏற்றுகை பற்றி பேசப்படவில்லை. மாவட்டத்தைப் பார்த்து தடுப்பூசி ஏற்றப்படுவதில்லை, சுகாதார அமைச்சின் வழிமுறைகளுக்கு அமைய தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.